மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் Surfing செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பித்த அரிய தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று மதியம் பெர்த்தின் தெற்கே உள்ள Prevelly கடற்கரையிலிருந்து சுமார் 50 மீ தொலைவில் Surfer திடீரென தண்ணீரில் விழுவதைக் கண்டார்.
அவர் தனது Surf board-இல் இருந்து விலங்கின் மீது விழுந்ததாகவும், அவர் அணிந்திருந்த சேணம் சுறாவின் உடலில் சிக்கிக் கொண்டதாகவும் கூறினார்.
பின்னர் அவர் தனது கைகளாலும் கால்களாலும் சுறாவைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறினார்.
சுறா அவரது Surf board-ஐ தாக்கியது, ஆனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், Prevelly கடற்கரைப் பகுதிக்கு தற்போது சுறா எச்சரிக்கை அமலில் உள்ளது. மேலும் கடற்கரைக்குச் செல்லும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதன்மைத் தொழில்கள் மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள் தற்போது கடலோர நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





