Newsஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

-

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு நிலை நிறுத்த அயராது செயற்பட்ட அமைதியான மனிதர் “ரவி அண்ணை” என்று அன்பாக அழைக்கப்பட்ட கதிர் ரவிச்சந்திரா நவம்பர் பதினொராம் நாள் சிட்னியில் இன்னுயிர் ஈந்தார்.

கன்பராவில் மதிப்பிற்குரிய சமூகத் தலைவராகவும், தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் உரிமைகள்,
கண்ணியத்திற்காக அயராது பாடுபட்ட திரு. கதிர் ரவிச்சந்திராவின் மறைவுக்கு அவுஸ்திரேலியா தமிழர் பேரவை (ATC) அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்காக திரு. ரவிச்சந்திரா தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் (AFTA) தலைவராகவும், கான்பெரா தமிழ் சங்கத்தின் நிறுவனராகவும், உலகளாவிய தமிழ் கூட்டணியின் உறுப்பினராகவும் திறன்பட செயலாற்றியவர்.

அத்துடன் ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தமிழ் குரலை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக 1996 ஆம் ஆண்டு கான்பெராவில் உள்ள எட்மண்ட் பார்டன் மையத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க “நீதியுடன் அமைதி” சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் திரு. ரவிச்சந்திரா முக்கிய பங்கு வகித்தார்.

இது தமிழர் போராட்டம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை உயர்த்திய ஒரு முக்கிய நிகழ்வாகும். மேலும் தமிழ் மக்களின் நீதி, உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த சர்வதேச ரீதியிலான செயலாக்க பரப்புரையை வடிவமைக்க உதவியது.

அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் துணிச்சல் ஆகியவை வரும் தலைமுறைகளுக்கு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன. அவரது ஆழ்ந்த பங்களிப்புகள் மற்றும் தியாக சேவைக்கு தமிழ் சமூகம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆஸ்திரேலிய மண்ணில், சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு போராளி மறைந்து விட்டார். அவர் நேசித்த தாயக மக்களின் சார்பாகவும், திரு. கதிர் ரவிச்சந்திராவின் மறைவுக்கு ஆஸ்திரேலியா தமிழர் பேரவை (ATC) அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...