Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) Asbestos துகள்கள் சோதனையின் போது வண்ண மணல் பொருட்களுக்கான திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, ACT இன் கல்வித் துறை வெள்ளிக்கிழமை 16 பள்ளிகளையும் ஆறு பாலர் பள்ளிகளையும் மூடியது. அதே நேரத்தில் மேலும் எட்டு பள்ளிகள் பகுதியளவு மூடப்பட்டன.
Kmart மற்றும் Target ஆகிய நிறுவனங்கள் கூடுதலாக நான்கு தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ACT கல்வி இயக்குநரகம் இன்று முதல் 69 பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளது.
ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை விட, சமீபத்தில் திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகள் கான்பெரா பள்ளிகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ACT கல்வி அமைச்சர் Yvette Berry கூறுகிறார்.
எனவே, பல பள்ளிகள் மீண்டும் திறக்க முடியும் என்றாலும், இன்று முதல் கூடுதல் பள்ளிகள் மூடப்பட வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், மணல் இல்லாத அல்லது மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட 23 அரசுப் பள்ளிகள் இன்று முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சுத்தம் செய்ய பல நாட்கள் ஆகலாம் என்று அவர் கூறுகிறார்.
பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பள்ளியிலும் காட்சி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக உரிமம் பெற்ற Asbestos ஒப்பந்ததாரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் ஒப்பந்ததாரர்களால் நடத்தப்பட்ட அனைத்து காற்று சோதனைகளிலும் காற்றில் கலந்திருக்கும் கல்நார் கிருமிக்கு எதிர்மறையான முடிவு கிடைத்துள்ளது. மேலும் சுகாதார அதிகாரிகள் ஆபத்து மிகக் குறைவு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.





