Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது.
AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள் உருவாக்குவதில் போட்டி போன்ற காரணங்களால், தற்போது சில வகை நினைவக சிப்களுக்கு (Memory chip) பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், Samsung Electronics நிறுவனம் இந்த மாதம் சில வகை நினைவக சிப்களின் விலையை ஒரேடியாக 60% வரை உயர்த்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், AI-க்கு தனியாக வடிவமைக்கப்பட்ட சிப்களுக்கும், அவற்றோடு இணைந்து பயன்படுத்தப்படும் உயர்தர நினைவக சிப்களுக்குமான (HBM Memory போன்றவை) தேவை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தத் தேவையை ஈடுகட்ட உற்பத்தி போதாததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், AI-யால் உருவாகியுள்ள “சிப் பற்றாக்குறை” காரணமாக, Samsung போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் நினைவக சிப்களை 60% வரை விலை உயர்த்தியுள்ளன.
இது AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு பெரிய அளவிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு பெரிய உதாரணம்!
இந்த விலை உயர்வு Mobile phone, மடிக்கணினி, Server போன்றவற்றின் விலையையும் எதிர்காலத்தில் பாதிக்க வாய்ப்பு உள்ளது





