Newsஉக்ரைன் - ரஷ்ய போர் - ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள்...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

-

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக வீரர்களின் மரணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வொஷிங்டன்னில் உக்ரைன் – ரஷ்யா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் பேசியதாவது,

இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த 25,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதற்கான ஆதாரமாக இது உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடாது. அமெரிக்காவின் பல நிர்வாகங்கள் 8 ஆண்டுகளாக செய்யாததை, நாங்கள் பொறுப்புக்கு வந்த ஓராண்டில் செய்து முடித்துள்ளோம். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உடனடியாக முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கல் அபுதாபியில் ரஷ்ய அதிகாரிகளுடன் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பேச்சுவாா்த்தை நடந்ததாகவும், இதில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் டிரிஸ்கல்லின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...