பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்களும் முயற்சி செய்துவரும் நிலையில், இந்த போட்டியில் Netflix முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பகுதியை பணமாக கொடுத்து இந்த ஒப்பந்தத்தை முடிக்க Netflix முன்வந்துள்ளதாக தெரிகின்றது.
தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இது இறுதியானால் Warner Bros-இன் படங்கள், Discovery Channel, HBO Max ஸ்ட்ரீமிங் சேவை என அனைத்தும் Netflix-இற்கு சொந்தமாகும்.
இது ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





