யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக் குழுவின் (ICH) 20வது மாநாட்டின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8 முதல் 13 வரை நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு, உலக அரங்கில் இந்தியாவின் கலாசார மரபுகளின் மதிப்பை மேலும் உயர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை இணைக்கப்படுவதற்கு முன்பாகவும் இந்தியாவின் பல பாரம்பரிய நிகழ்வுகள் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தீபாவளி பண்டிகை இணைப்பானது இந்தியாவின் கலாசார மரபுகளின் சர்வதேச அங்கீகாரத்திற்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
இந்தியா யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய மாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.





