சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், “Bang Bus” என்று பெயரிடப்பட்ட காரில் பின்னால் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு $20 அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலினீஸ் சட்டத்தின்படி, அத்தகைய வாகனங்கள் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், ஆபாசமான ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியதாக சந்தேகத்தின் பேரில் Tia Billinger-உம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குடிவரவுச் சட்டங்களை மீறியதற்காக அவர் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்படலாம் என்றும், 10 ஆண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tia Billinger-உடன் இருந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் ஒரு ஆஸ்திரேலியரும் பாலியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்தோனேசிய காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகள், அந்தக் குழு ஆபாச உள்ளடக்கத்தை உருவாக்கியதற்கான எந்த ஆதாரத்தையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இருப்பினும், போக்குவரத்து மற்றும் சுற்றுலா விசா சட்டங்களை மீறியதற்காக அந்தக் குழு நாடு கடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





