தற்போது சம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா, அடுத்து வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2026 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது.
இதில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரு புதிய வீரர்களான, நிதேஷ் சாமுவேல் மற்றும் நதேன் கூரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விக்டோரியாவைச் சேர்ந்த ஒலிவர் பீக் தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது.
சமீபத்தில் பேர்த் நகரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட மூன்று அறிமுக வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சாமுவேல் மற்றும் கூரே இருவரும் தங்கள் சிறப்பான ஆட்டத்தின் காரணமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சாமுவேல், சம்பியன்ஷிப் தொடரின் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக இருந்தார். அவர் 91 எனும் சராசரியில் 364 ஓட்டங்களைக் குவித்து, தொடரின் சிறந்த வீரராகவும் பெயரிடப்பட்டார்.
கூரே, தனது சகலதுறை ஆட்டத் திறனுக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு வீரர்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொடரின் சிறந்த அணியிலும் இடம்பிடித்தனர்.





