Newsபிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவுக்கு விஜயம்

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவுக்கு விஜயம்

-

ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து 13ம் திகதி இந்திய சென்றுள்ளார்.

மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து, அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

அத்துடன், அவர் தங்கியுள்ள கொல்கத்தா நகர ஹோட்டலுக்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக கொல்கத்தா நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது இந்த விஜயம் ‘GOAT India Tour 2025’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை வரவேற்கப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 70 அடி உயரமான அவரது உருவச்சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி தனது இந்திய விஜயத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விசேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, கொல்கத்தாவில் நடைபெற்ற அவரை வரவேற்கும் நிகழ்வில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மெஸ்ஸியின் இந்திய விஜயத்தின் போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு ரசிகரிடமிருந்து இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்த தொகை அறவிடப்படுவதுடன், அதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் 35 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்ததாகும்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...