Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அம்சம் beta-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணக்கமான Android தொலைபேசி மற்றும் Google Translate பயன்பாடு மட்டுமே தேவை.
70க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு நேரடி ஆடியோ மொழிபெயர்ப்புகளை வழங்கும் இந்த அமைப்பு, Google-இன் AI கருவியான Gemini-ஆல் இயக்கப்படுகிறது.
இது பேச்சுவழக்கு, உள்ளூர் சொற்கள் மற்றும் சிக்கலான அர்த்தங்களை மிகவும் துல்லியமாக மொழிபெயர்க்க உதவும் என்று கூறப்படுகிறது.
முதலில் Pixel Buds-இற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த அம்சம், இப்போது எந்த Headphone உடனும் கிடைக்கிறது, வெளிநாட்டு மொழி பேச்சுகள், அறிவிப்புகள் அல்லது உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள பயணம் செய்யும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Beta பதிப்பு தற்போது பல நாடுகளில் கிடைக்கிறது, மேலும் எதிர்காலத்தில் இதை iOS மற்றும் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த கூகிள் திட்டமிட்டுள்ளது.





