தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகின்றது.
இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் முதல்பாடலான “தளபதி கச்சேரி” பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்திய மதிப்பில் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் டிரெய்லர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.





