Sydneyசிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

சிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

-

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bondi கடற்கரையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 50 வயதுடைய துப்பாக்கிதாரி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், இந்தியக் கடவுச்சீட்டையே வைத்திருந்துள்ளார்.

யூதர்களின் ‘Hanukkah’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குறித்த நபரும் அவரது மகனுமே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகளில் ஒருவரை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் துணிச்சலாகப் பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார்.

இதன்போது கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...