ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆகியுள்ளது. அங்கு உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த உணர்ச்சிகரமான நிகழ்வால் மனதளவில் பாதிக்கப்படும் எவருக்கும் உதவ சுகாதார செவிலியர்கள் அங்கு இருக்கிறார்கள்.
அதே சமயம் பாதுகாப்பு நடவடிக்கையாக, நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க காவல்துறையினர் போண்டி கடற்கரையை சுற்றியுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டனர்.
கலவரத் தடுப்புப் படையினர், உருமறைப்பு உடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்த அதிகாரிகள் மற்றும் குதிரைப்படை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் லான்யன் கூறுகையில், “இது ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையைக் குறிக்கவில்லை என்பதை நான் சமூகத்திற்கு மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்தத் துயரம் யூதக் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுடன் துணை நிற்கும் பரந்த சமூகத்தை எந்த அளவிற்கு ஆழமாக பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.





