Tesla நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
SpaceX, Starlink, Tesla நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்து, உலகின் முதல் பெரும் பணக்காரராக மேலும் உயர்ந்துள்ளார்.
Tesla நிறுவனத்தின் மீதான வழக்கில், எலான் மஸ்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததால், எலானின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டொலர் என்றளவில் உயர்ந்தது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலராகஇருந்தது.
இந்த நிலையில், 800 பில்லியன் டொலர் மதிப்பீட்டு சந்தையில் SpaceX நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், டிசம்பர் 2ஆவது வாரத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலரை எட்டியது. தற்போது, ஒரே வாரத்தில் 700 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது.





