தென்னாபிரிக்காவின் Johannesburg அருகே உள்ள மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Bekkersdal-இல் இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத 12 துப்பாக்கிதாரிகள், நேற்று 21 அன்று, இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தருவதற்கு முன் தாக்குதல்தாரிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
தப்பிச் செல்லும்போது தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதல்தாரிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





