மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு, நிக்கிதாவின் சகோதரர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஜோயல் மிக்கல்லெஃபை எதிர்கொண்டபோதுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது விக்டோரிய மாகாண நீதித்துறை 34 வயதான மிக்கல்லெஃப் தனது செயல்களுக்குப் பொறுப்பல்ல என்று கண்டறிந்துள்ளது.
நிக்கிதாவை மிக மோசமான நிலையில் படுகொலை செய்யும் போது மிக்கல்லெஃப் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிக்கிதாவின் வழக்கை மூடி மறைக்கும் வேலைகள் மட்டுமே நடந்துள்ளது என சகோதரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.





