நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு வடக்குப் பகுதிக்கும் கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெய்ர்ன்ஸ் மற்றும் டவுன்ஸ்வில்லி இடையே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இன்று மிக மோசமாக இருக்கும், ஆனால் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள 20 நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது 2019 ஆம் ஆண்டு 400 முதல் 700 மில்லிமீட்டர் வரை மழை பெய்த கனமழையைப் போன்றது.
Cairns, Innisfail, Tully, Ingham, Mount Isa, Cloncurry, Burketown, Mornington Island, Normanton, Doomadgee, Richmond, Julia Creek, Camooweal மற்றும் Croydon ஆகிய இடங்களில் இன்றிரவு முதல் அடுத்த வாரம் வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் ஷேன் கென்னடி தெரிவித்தார்.
இதற்கிடையில், வடகிழக்கு வெப்பமண்டல கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதாகவும், கடுமையான சேதம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக Cardwell Gap பகுதியில் 217 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் சாலைகள் மூடப்படும், சமூகங்கள் தனிமைப்படுத்தப்படும் என்றும், வெள்ள நீர் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மூத்த வானிலை ஆய்வாளர் ஜோனாதன் ஹோவ் எச்சரித்தார்.





