அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.
மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இவ்விரு நாடுகளும் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளன.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தனித்தனி அறிக்கைகளின் மூலம் இது தொடர்பில் அறிவித்துள்ளன.
பரஸ்பரம் என்ற கொள்கையின்படி, மாலி குடியரசின் அரசாங்கம் மாலி குடிமக்கள் மீது விதிக்கப்படும் அதே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமெரிக்க குடிமக்களுக்கும் விதிப்பதாக அறிவித்துள்ளது.
புர்கினா பாசோவின் வெளியுறவு அமைச்சர் கரமோகோ ஜீன்-மேரி ட்ரேரே கையெழுத்திட்ட மற்றொரு அறிக்கையில், அமெரிக்க குடிமக்கள் புர்கினா பாசோவிற்குள் நுழைவதற்கான தடைக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள காரணத்தையே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





