குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார்.
சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு ஊழியர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் மற்ற ஊழியர் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தை அடைந்துள்ளன. மேலும் காணாமல் போன தொழிலாளியைத் தேடும் பணி கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் நடந்து வருகிறது.
நிலக்கரி சுரங்கப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சுரங்கத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





