Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
Galaxy A17 5G Smartphone-ஐ மிகவும் மலிவு விலையில் US$199 இல் வாங்கலாம்.
இந்த போனில் 6.7- அகல FHD+ Super AMOLED திரை, Exynos 1330 சிப்செட் மற்றும் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது.
இது Fast-charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
கூடுதலாக, 11 அங்குல பெரிய திரை கொண்ட Galaxy Tab A11+ டேப்லெட்டும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் $250 விலையில் சந்தைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டில் 8GB வரை RAM மற்றும் 256GB வரை சேமிப்பிடம் உள்ளது. மேலும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு 15 மணிநேர தொடர்ச்சியான பேட்டரி ஆயுள் இருப்பதாக Smartphone கூறுகிறது.





