வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாகக் கைது செய்து நியூயோர்க்கிற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அங்கு நிலவும் தகவல் தொடர்புக் குறைபாடுகளை நீக்க ‘ஸ்டார்லிங்க்’ மூலம் பெப்ரவரி 3-ஆம் திகதி வரை இலவச இணையம் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள நிலையில், வெனிசுலாவின் நிர்வாகத்தை சீரமைக்கும் வரை அமெரிக்கா அந்நாட்டை வழிநடத்தும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பத்தாண்டுகால மதுரோவின் ஆட்சி அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





