சிட்னியின் மேற்கில் உள்ள Villawood-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் சிக்கிக் கொண்ட ஒரு இளைஞனை போலீசார் மீட்டுள்ளனர்.
அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், கத்திக்குத்து காயங்கள் மற்றும் தீக்காயங்களுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து உதவி கோரி அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் வந்து காரின் பின்புறத்தைச் சோதித்தபோது, கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த இளைஞனைக் கண்டனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, இந்த நபர் நேற்று Guildford பகுதியில் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தக் கடத்தல் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் வேலையா என்பதைக் கண்டறிய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.





