வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அகற்ற அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை காரணமாக கரீபியன் பகுதியில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விடுமுறை காலத்தின் மிகவும் பரபரப்பான நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
FlightRadar24 தரவுகளின்படி, நடவடிக்கையின் நாளில் எந்த சிவிலியன் விமானமும் வெனிசுலா வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படவில்லை.
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விதித்துள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, புவேர்ட்டோ ரிக்கோ, அருபா மற்றும் பார்படோஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீவுகளுக்கான விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
JetBlue மட்டும் 215 விமானங்களை ரத்து செய்துள்ளது, மேலும் பல முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் அட்டவணைகளை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், கூடுதல் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இந்த விமானப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் Sean Duffy அறிவித்தார்.
அதன்படி, எதிர்கால விமானங்கள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போதைய நெரிசல் காரணமாக தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.





