மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன.
அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான செயற்கைத் தோலை ஹொங்கொங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதனை மின்னணு தோல் (Ncuromorphic E-Skin) என அழைக்கின்றனர்.
மிகவும் மெல்லிய இந்த படலத்தில் ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இது மனித உடலிலுள்ள நரம்புகள் எவ்வாறு மூளைக்கு தகவல்களை அனுப்புகிறதோ, அதேபோல் இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் உணர்வுகளை ரொபோவின் கணினிக்கு அனுப்பும்.
இந்தத் தொழில்நுட்பம் முழுமையாகும்போது ரொபோக்களும் மனிதர்களைப் போல் உணர்வுள்ளவையாக மாறிவிடும்.





