விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள் ஏற்கனவே எரிந்து நாசமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 70 விமானங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணிக்கு முன்னதாக அதிக ஆபத்துள்ள பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
அதிக வெப்பநிலை காரணமாக தலைச்சுற்றல், வாந்தி மற்றும் மிகுந்த சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக சிகிச்சை பெறவும், சிறு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனியாக விடக்கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், வடக்கு குயின்ஸ்லாந்தைப் பாதிக்கும் கனமழையால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மேலும் அடுத்த சில நாட்களில் இது ஒரு சூறாவளியாக மாற 35% வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.





