Cinema39-க்கும் அதிகமான நாடுகளில் ‘ஜன நாயகன்’ வெளியிட தடை

39-க்கும் அதிகமான நாடுகளில் ‘ஜன நாயகன்’ வெளியிட தடை

-

நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எதிர்வரும் 9ஆம் திகதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் “ஜன நாயகன்” திரைப்படம் எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அவர் நாயகனாக நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், “ஜன நாயகன்” படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட 39-க்கும் அதிகமான நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, விநியோகஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...