மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நடத்தை மற்றும் ஒழுக்க நடைமுறைகளில் Ryan Turner என்பவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை Ryan Turner ஆஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசா ரத்து செய்யப்பட்டுள்ள Ryan Turner National Socialist Network தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.





