தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது.
குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தை அண்மித்து சென்றுள்ளது.
குறித்த ரயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ள நிலையில், அதில் பயன்படுத்தப்பட்ட க்ரேன் ஒன்று திடீரென சரிந்து ரயிலின் ஒரு பெட்டியின் மீது விழுந்துள்ளது.
க்ரேன் விழுந்ததில் ரயில் தடம் புரண்ட நிலையில், இவ் விபத்தில் சிக்கி 22 பயணிகள் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளர்.
அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





