ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் சொத்து அழிப்பு வழக்குகளுக்குப் பின்னால் உள்ள மூளையாக அவர் கருதப்படுகிறார்.
மெல்போர்னில் சமீபத்தில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் பல புகையிலை கடைகளுக்கு தீ வைத்ததன் பின்னணியில் காசெம் ஹமாத் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவை விட்டு தப்பிச் சென்று சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்க இன்டர்போலின் உதவியும் கோரப்பட்டது.
ஈராக்கிய அதிகாரிகள் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர் பிடிபட்டார். மேலும் வரும் நாட்களில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவதற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மத்திய காவல்துறை தொடங்கியுள்ளது.
இதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்டதும், ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய பல கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார்.





