பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்,
”அமெரிக்க மக்களிடமிருந்து ஏற்க முடியாத அளவில் நலத்திட்ட உதவிகளைப் பெறும் 75 நாடுகளின் குடியேற்ற விசா நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
புதிய குடியேறிகள் அமெரிக்க மக்களின் செல்வத்தைச் சுரண்ட மாட்டார்கள் என்பதை அமெரிக்கா உறுதி செய்யும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





