ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி கலைஞர் ஆவார்.
இவர் இந்த துறையில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய வருடாந்திர கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான Woodford நாட்டுப்புற விழாவிலும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
46 வயதான இவர் திங்கட்கிழமை அதிகாலை காணாமல் போனதாக உறவினர் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிரேட்டர் பிரிஸ்பேர்ணின் தெற்கே உள்ள புக்கான் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் Velvet Pesu சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது அந்த வீட்டில் வசிப்பவரைத் தேடுவதற்கு வழிவகுத்தது.
அதே நாளில் மதியம் 2 மணியளவில், புக்கனியில் இருந்து சுமார் 465 கிலோ மீற்றர் தெற்கே உள்ள மிட் நார்த் கோஸ்ட் பகுதியில், அதிவேக கார் சேசிங்கிற்குப் பிறகு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் 36 வயதான Wa’el Abdallah Saleem Alfar என தெரிய வந்துள்ளது. ஆனால், பாடகியின் மரணத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை பரிந்துரைக்கவில்லை. அது தொடர்பாக அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.





