Cinemaதனுஷ், மிருணாள் திருமணம் - வெளியான தகவல்

தனுஷ், மிருணாள் திருமணம் – வெளியான தகவல்

-

தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

வட இந்தியாவில் இது செய்தியாகவும் வெளியான நிலையில், இதுபற்றி தனுஷோ அல்லது மிருணாள் தாகூரோ இதுவரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், “உண்மையிலேயே அப்படியிருக்குமோ?” என்ற கேள்வி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பொலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்குநர் கூறியதாவது:

“இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?

விவாகரத்து நடந்தபோது, மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள்.

தனுஷைப் பொறுத்தவரை, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அதற்கு காரணம், தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை.

தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...