Adelaideஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொல்லப்பட்ட வழக்கு

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொல்லப்பட்ட வழக்கு

-

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவர் தன் மனைவியின் மரணத்துக்கு தான்தான் காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, ஆஸ்திரேலியாவின் Adelaide நகரில் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்துவந்த சுப்ரியா (36) என்னும் இந்திய வம்சாவளியினரான பெண் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற மருத்துவ உதவிக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்துவிட்டார்.

சுப்ரியாவின் மரணம் தொடர்பில் அவரது கணவரான விக்ராந்த் தாக்கூர் (42) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கக்கூட இல்லை.

இந்நிலையில், தனது மனைவியின் மரணத்துக்குக் தான்தான் காரணம் என தற்போது ஒப்புக்கொண்டுள்ளார் தாக்கூர். என்றாலும், தான் அவரைக் கொலை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர்களின் DNA ஆய்வு முடிவுகளும், சுப்ரியாவின் உடற்கூறு ஆய்வு முடிவுகளும் வரவேண்டியுள்ளதால் வழக்கை 16 வாரங்கள் தள்ளிவைக்க அரசு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதற்கிடையில், சுப்ரியாவின் மகனான சிறுபையன், தனது தாயை இழந்து அநாதரவாக விடப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...