நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய பல கட்டாய சோதனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 16 நியமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மோட்டார் வாகன ஓட்டுநர்கள் NSW இல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது கட்டாய நடைமுறைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் அவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
சாலை விதிமீறல்களுக்காக 13 அபராதப் புள்ளிகளுக்கு மேல் குவித்த ஓட்டுநர்கள், அவர்களின் புதிய விதிகளின் கீழ் NSW சாலைகளில் வாகனம் ஓட்டத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து NSW இல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்களும் கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களைப் போலவே, NSW இல் ஓட்டுநர் உரிமச் சட்டங்களையும் கொண்டு வருவதற்காக இந்தப் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகள் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.





