தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது .
18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு ஆண்டுக்கு $250 வவுச்சரை வழங்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும். மேலும் இதேபோன்ற திட்டம் தற்போது Malta-விலும் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது .
Greens கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Robert Simms கூறுகையில், ஆண்டுக்கு சுமார் 96,000 இளைஞர்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் $6 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வவுச்சர்களை Gym உறுப்பினர் சேர்க்கை, கால்பந்து, நெட்பால் போன்றவற்றுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது .
தற்போதுள்ள குழந்தைகள் விளையாட்டு வவுச்சர்கள் திட்டத்திற்கு இது மேலும் முன்னேற்றம் என்று ராபர்ட் சிம்ஸ் குறிப்பிட்டார் .
COVID நெருக்கடிக்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு பொருளாதார ஆதரவிற்கும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும், அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் இது ஒரு சிறந்த உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார் .
கட்சியின் முக்கியத் தலைவர்களான பீட்டர் மாலினாஸ்காஸ் மற்றும் ஆஷ்டன் ஹியர்ன் ஆகியோரால் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்படும் என்று பசுமைக் கட்சியினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.





