சுறா தாக்குதலுக்கு உள்ளாகி சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது நிக்கோ ஆன்டிக் இன்று காலமானார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Vaucluse-இல் உள்ள Neilson பூங்காவிற்கு (Shark கடற்கரைக்கு அருகில்) அருகிலுள்ள ஒரு குன்றிலிருந்து கடலில் குதிக்கும் போது குழந்தை ஒரு சுறாவால் தாக்கப்பட்டது .
நிக்கோவின் நண்பர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை கரைக்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன .
சமீபத்தில் NSW கடற்கரைகளில் பல சுறா தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, 48 மணி நேரத்திற்குள் NSW கடற்கரைகளில் நடந்த நான்கு தாக்குதல்களில் நிக்கோ முதலாவதாகும் .
மேன்லி கடற்கரையில் 27 வயது surfer ஒருவர் படுகாயமடைந்து கால் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் Dee Why கடற்கரையில் 11 வயது சிறுவனின் surfboard ஒரு சுறாவால் தாக்கப்பட்டது .
பின்னர், Point Plomer-இல் (Port Macquarie-இற்கு அருகில்), 39 வயதான surfer ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு, தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
500 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கனமழை காரணமாக ஆற்று நீர் கடலுக்குள் பாய்வதால் ஏற்படும் உவர் நீர் (நன்னீர் + உப்பு நீர்) நிலைகளில் சுறாக்கள் அதிகமாக சுற்றித் திரிவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் .





