உலகப் புகழ்பெற்ற “Free Solo” மலையேற்ற வீரர் Alex Honnold, தைவானில் உள்ள 508 மீட்டர் உயரமுள்ள Taipei 101 கட்டிடத்தை வெற்றிகரமாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதில் மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், இந்த மிகவும் ஆபத்தான பயணத்திற்கு அவர் எந்த பாதுகாப்பு கயிற்றையோ அல்லது பிற உபகரணங்களையோ பயன்படுத்தவில்லை.
இந்த பிரமாண்டமான 101 மாடி கட்டிடத்தை ஏற Alex-இற்கு வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஆனது.
அமெரிக்காவின் Yosemite தேசிய பூங்காவில் எல் கேபிடன் மலையேற்றம் மூலம் உலகளவில் பிரபலமான அலெக்ஸ், Netflix-இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டார்.
ஒரு சிறிய தவறு உயிர்களைப் பறிக்கக்கூடிய இத்தகைய சவாலில் வெற்றி பெறுவது, விளையாட்டு உலகிலும் பொறியியல் துறையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





