தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை ஏற்பட்ட தீயின் பரப்பளவை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமாக பரவியுள்ளது. மேலும் விக்டோரியாவில் தீயினால் எரிக்கப்பட்ட மொத்த பரப்பளவு 8,600 ஹெக்டேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு வீடு தீயினால் நாசமாகியுள்ளது. மேலும் சுமார் 1,100 வீடுகளில் வசிப்பவர்கள் இன்றிரவுக்குள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
Gellibrand, Carlisle River, Barongarook, Kawarren, Forrest, Beech Forest மற்றும் Great Otway தேசிய பூங்கா ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் காட்டுத்தீ அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநில காவல்துறை மற்றும் மாநில பேரிடர் சேவைகள் பொதுமக்களுக்கு தகவல் அளித்து அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





