அமெரிக்காவில் 8 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம் Bombardier Challenger 600 ஜெட் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Maine-இல் உள்ள Bangor சர்வதேச விமான நிலையத்தில், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஜெட் விமானத்தில் இருந்த 8 பேர் குறித்து இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த உடனேயே விமான நிலைய அவசர சேவைகள் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் இன்னும் விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





