பணவீக்கம் குறித்த புதிய அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் எதிர்பார்ப்புகளை விட உயர்ந்தது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் (ABS) படி, பணவீக்கம் டிசம்பரில் 3.8% ஆக பதிவாகியுள்ளது. இது நவம்பரில் 3.4% ஆக இருந்தது.
ஆனால் 2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 3.5% ஐ எட்டும் என்று முன்னர் கருதப்பட்டது.
இந்தப் பணவீக்க உயர்வால், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியால் ஆஸ்திரேலியாவில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





