Newsஇங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

-

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

சிறுவர் துஷ்பிரயோக விவகாரங்களை முறையாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் 2024 நவம்பரில் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் வெல்பிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பழைமைவாத அங்கிலிக்கன் ஆயர்கள், பெண்கள் ஆயர் பதவியை வகிப்பதை எதிர்க்கின்றனர்.

மாற்றுப் பாலினத் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதை சாரா முல்லாலி ஆதரிப்பதால், ருவாண்டா போன்ற நாடுகளின் மதத் தலைவர்கள் இவரது தலைமைத்துவத்தை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி கென்டர்பரி கதீட்ரலில் நடைபெறும் விசேட வழிபாட்டுடன் அவர் முறைப்படி ஆயராகப் பொறுப்பேற்பார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் Sophie Molineux நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கேப்டன் அலிசா ஹீலி அடுத்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...