நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இன்று காலை 7.30 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன .
காயமடைந்தவர்களில், 30 வயதுடைய ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் விமானம் மூலம் Wollongong மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
30 வயதுடைய ஒரு பெண் வயிற்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் சிறு காயங்களுடன் Nowra மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





