ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற “Purple Bliss” தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும்.
இது ஆஸ்திரேலியாவில் பயிரிடப்பட்டு விற்கப்படும் முதல் புதிய GM முழு உணவாக வரலாற்றை உருவாக்குகிறது.
இந்த ஊதா நிற Bliss தக்காளி, பழத்தின் ஆக்ஸிஜனேற்றிகள், சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்த Snapdragon பூவிலிருந்து மரபணுக்களை இணைத்து வளர்க்கப்பட்டதாக விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்தனர்.
இது உண்மையிலேயே இனிமையான சுவை கொண்டது என்று சந்தைப்படுத்தல் நிறுவனம் கூறுகிறது. மேலும் அதன் வெற்றி நுகர்வோர் ஏற்றுக்கொள்ளலைப் பொறுத்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
முதற்கட்டமாக மெல்பேர்ண் பழக் கடைகளில் விற்கப்படும் இந்த ஊதா நிற தக்காளிகள், நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கடுமையான விதிமுறைகளின் கீழ் நடைபெறும் இத்தகைய கண்டுபிடிப்புகள், எதிர்கால உணவு உற்பத்திக்கான புதிய வழிகளைத் திறக்கின்றன என்று விவசாயிகளும் விஞ்ஞானிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.





