ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது .
இப்போது அந்த வரி லிட்டருக்கு $107.99 ஆகும்.
பியர் குடிப்பவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு வரிகளை அதிகரிக்காமல் தற்காலிக நிவாரணம் அளித்துள்ளது அரசாங்கம்.
ஆனால் மதுபானம் மற்றும் cocktail குடிப்பவர்களுக்கு அந்த நிவாரணம் கிடைப்பதில்லை.
பியர் மற்றும் வயினை விட மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக Spirits and Cocktails Australia கூறுகிறது.
Pubகள் மற்றும் பார்களில் உள்ள மதுபானங்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
இந்த சமீபத்திய விலை உயர்வு, சராசரியாக 700 மில்லி ஜின் அல்லது விஸ்கி பாட்டிலின் விலையிலிருந்து அரசாங்கத்திற்கு $32 வரி விதிக்கும் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது .
Cocktail அல்லது mixed drinkம் இப்போது பலருக்கு ஆடம்பரமாக மாறிவிட்டதால், இந்த வரி Pub மற்றும் சிறிய பார் உரிமையாளர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று இரவு நேர தொழில்கள் சங்கம் கூறுகிறது.





