இலங்கை சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள 10ல் 9 குடும்பங்களும் தோட்டங்களில் 10ல் 8 குடும்பங்களும் தினசரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சனத்தொகையில் 43 வீதமானவர்கள் டிசம்பர் மாதத்தில் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக இந்த அறிக்கை காட்டுகிறது.
67 சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை கைவிட்டுவிட்டு, தங்களுக்குப் பிடிக்காத மலிவான உணவுகளுக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.
டிசம்பரில், உலக உணவுத் திட்டம் இலங்கையில் ஊவா மாகாணத்தில் 43 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும், வடக்கு மாகாணத்தில் 25 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறியது.