Newsஇங்கிலாந்தில் வெடித்து சிதறிய 2ம் உலகப்போர் குண்டு

இங்கிலாந்தில் வெடித்து சிதறிய 2ம் உலகப்போர் குண்டு

-

இங்கிலாந்தில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது.

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு பள்ளம் தோண்டியபோது 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த பொலிஸார் 2-ம் உலகப்போர் குண்டை பத்திரமாக செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 400 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த குண்டு வெடித்தது.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பால் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே 2-ம் உலகப்போர் குண்டு வெடித்து சிதறும் வீடியோவை பொலிஸார் ட்விட்டரில் பகிர்ந்தனர்.

நன்றி தமிழன்

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...