கிராவல் புயல் காரணமாக நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வடதீவின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தின் போது மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது இத்தகைய நிலைமைகள் முன்னர் அறிவிக்கப்பட்டன.
இதேவேளை, பலத்த காற்று காரணமாக நியூசிலாந்தின் பல விமான நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.