Newsஅவுஸ்திரேலிய இசைக் கச்சேரிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி!

அவுஸ்திரேலிய இசைக் கச்சேரிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி!

-

இசை நிகழ்ச்சிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் சிலர் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து, உண்மையான நோக்கத்திற்காக வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கூட அவுஸ்திரேலியா வீசா கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், பல்வேறு இசைக் கச்சேரிகளை நடத்துவது என்ற போர்வையில் சில தரப்பினர் அவுஸ்திரேலிய விசாவைப் பெறுவதற்கு பல்வேறு யுக்திகளை மேற்கொள்வதாகும்.

ஏற்பாடு செய்யப்பட்ட சில நாட்களிலேயே இசைக் கச்சேரிகள் ரத்து செய்யப்படுவது இதன் முக்கிய அம்சமாகும்.

இசை நிகழ்ச்சிகளுக்கு விசா பெறும் இசைக் கலைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு காணாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான விடயங்களினால் உண்மையான நோக்கங்களுக்காக அவுஸ்திரேலியாவிற்கு வரும் மாணவர்களுக்கும் அவுஸ்திரேலியாவிற்கு பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வரும் இலங்கைப் பெற்றோருக்கும் விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான தந்திரங்கள் இலங்கையின் இமேஜை மேலும் சேதப்படுத்தும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் உண்மையாகவே தமது செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கையின் இசைக் கலைஞர்களுக்கு கடுமையான அநீதிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளும் இசைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கு டொலர் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்கும் இசைக்கலைஞர்கள் ஊக்கம் குன்றி, நாட்டுக்கு உரிய வருமானம் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

Latest news

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....