எதிர்வரும் 2 நாட்களில் விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா மாகாணங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை தாண்டும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
மெல்போர்னில் இன்று வெப்பநிலை 31 டிகிரியாக இருந்தது, ஆனால் நாளை 35 டிகிரியாக உயரும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விக்டோரியா பிரதேசங்களில் இன்று வெப்பநிலை 36 டிகிரியாக பதிவாகியுள்ளதுடன், எதிர்வரும் 2 நாட்களில் இது 40 பாகையாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மேனியா – மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை கணிசமாக உயராது என்றும் 30 டிகிரி வரம்பில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 50 டிகிரியை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.